தனலட்சுமி

இழை இழையாய் கோடி பட்டுநூல் கற்றை - பின்னல்

ஒற்றை பிறை ஏங்கும் - நெற்றி

வில்லென இரு புருவ
நாணேற்றி
ஒளி உமிழ அம்பெய்யும்
விழியிரண்டை குளிர்விக்கும்
கண்ணிமைகள் - தானியங்கி சாமரங்கள்

மலர்முகத்தை சமச்சீராய் பகுக்கும்
மங்கலநாசி வீசியெறியும்
கரிவளியும் (CO2)
உயிர்வளி ஆகி (O2)
உயிர்வலி நீக்கும்
எனக்கு மட்டும்

செம்மையும் நாணும்
அதரம் கண்டு
வெண்மையும் வெட்கும்
நற்பல் வரிசை கண்டு

தட்ப வெப்பம்
தடுமாறி
காதல் நட்டத்திலுள்ள
எனக்கு
தனமாய்
அட்டத்திலொரு லட்சுமியாய்
என் தனலட்சுமி.

எழுதியவர் : செந்தூரணி (25-Oct-16, 4:05 pm)
பார்வை : 91

மேலே