விண்ணில் உலாவரும் நிலாப்பெண்ணே 555
நிலா பெண்ணே...
உன் சகோதரன் பகலில்
வெப்பமாக வந்தாலும்...
நீயோ இரவில் குளிர்ச்சியாக
வருகிறாய்...
பூமியில் உள்ள உன் தங்கைகள்
பகலில் காணும் அழகைவிட...
இரவில் உன் வெளிச்சத்தில்
காணும் அழகே அழகுதான்...
மாதத்தில் ஒருமுறை உன் முகத்தை
முழுமையாக காட்டுகிறாய்...
பூமி எங்கும் வெளிச்சமாக
நீ வந்தாலே...
உன் முழுமுகத்தை
மாதத்தில் ஒருமுறை...
முழுமையாக மறைத்துக்கொள்கிறாய்
பூமியெங்கும் இருளாய்...
ஆயிரமாயிரம் விளக்குகள்
ஏற்றினாலும்...
உன் இருளை வெல்ல முடியவில்லை
மனிதர்கள் எங்களால்...
உன் கூடவே வரும் பனித்துளி புல்லின்மீது
உறங்குவதும் பூவின்மீது உறங்குவதும்...
பார்க்கும்போது அடடா
என்ன அழகு எத்தனை அழகு...
உன் சகோதரனை கண்டால்
மறைகிறது பனித்துளிகள்...
பூமியில் உன் தங்கைகள்
[பாவைகள்] அழகு...
கானகத்தில் நடைபோடலாம் உன்
துணைகொண்டு இரவு நேரங்களில்...
தினமும் நீ இரவில் வந்து பகலில்
மறையும் காரணமென்ன...
உனக்கு கட்டளை
இடுவது யார்...?
தினம் தினம் உன்னைக்கண்டு
உனக்காக நூறு கவிதைகள்...
நூறு கவிஞர்கள்
உன்னை பாடவே இங்கு...
தினம் தினம்
நீ உதித்துக்கொண்டே...
எப்படி கரையாமலே
கம்பீரமாய் உலவருகிறாய்...
எங்களின் மனங்களை
கொள்ளைகொண்டு...
ஒருமானிடனின் உயிர்வாழும்வரை
பூமியில் உலாவருவாய்...
நீயும் கறையப்போவதில்லை
உனக்கு முடிவும் இல்லை...
நித்தம் நூறு கவிஞனார்கள்
உன்னை பாடிக்கொண்டே...
உன்னை வர்ணிக்க எனக்கு
வார்த்தைகள் இல்லை...
நீ உல்லாசமாக உலாவர
எல்லையில்லா நீலவானம்...
உன்னை எப்போதும்
சூந்துகொள்ள விண்மீன் கூட்டம்...
விண்ணில் நிலாப்பெண்ணாக
உலாவருகிறாய்...
மண்ணில் உன்னைப்பாட
உனக்காகா காத்திருக்கிறறோம் நாங்கள்...
இயற்கை அன்னையின்
மூத்தமகளே...
முழுமதி எழில்மதியே என்றும் நீ
உல்லாசமாக உலாவரவேண்டும்...
பூலோகம் இல்லாமல்
போகும்வரை விண்ணில் நீ.....