மன்மத்க் குளிர் கவிதை
மழைக்கு குடையானது கையிலிருந்த நோட்புக்.
*
மழைக்கு ஒதுங்கியவள் அருகில் சூடான மனிதர்கள்.
மழையில் மரத்தில் அமர்ந்திருக்கும் கிளிக்கு மன்மதக் குளிர்.
*
மழைத்துளிகளோடு சேர்ந்து உதிர்ந்தது பவளமல்லிப்பூக்கள்.
*
மழை நின்றபின் மலர்களிடம் குளிரைப் பற்றி விசாரித்தது பட்டாம்பூச்சி.
ந.க. துறைவன்.