எத்தனை கால்கள்
பிள்ளைப் பருவத்திலே
பொடிநடைதான் நாலுகாலில்..
பெரியவரான பின்னே மனிதன்
போடும் நடை இருகாலில்..
முதுமையில் வந்தது
ஊன்றுகோலொடு மூன்றுகால்..
படுத்ததும் பாடையில்,
பற்றித் தூக்கிச்செல்கையில்
இருநான்கு கால்கள்..
காலத்தின் கால்களுக்குக்
கட்டுப்பாடே இல்லை...!