என் கனவுகளே
என் கனவுகளே ,,
உன் விம்பங்கள் வாழ்வில்
பட்டுதெறிப்பது எப்போது ?..
கடந்து போன நொடிகளின்
வேதனைத்தழும்புகள்
சிரிக்கின்றன.....,
இலக்கரமாகத்தான்...!
வந்து மறையும் தென்றலும்
கனவுகளின் பக்கங்களை தான்
மீட்டிப்பார்க்கிறது .....,
இலக்கின் பாதையின்
நெருப்பும் சிலசமயம்
சில்லென்று இதமாய்
இருக்கின்றது ....,
மனம் கொண்ட உறுதி
வலிமையாய் கர்வத்தில்
திளைக்கிறது ...,
இது வெற்றிக்கான
போராட்டம் ....,
இங்கு தடைக்களுக்கு
எங்கும் தடையே ...,
தூற்றும் உறவுகள்
மேல் அதிகம் அன்பு
தளிர்விடுகின்றது ...,
நாளையே பொழுதின்
விடியலில் அவர்கள் பெயர்கள்
மிளிரும் ....,
முடியாதென்று மருந்து
அவர்கள்
தராவிட்டால் தோல்விகள் எங்கனம்
சாதனைகளாய்
மாறும் என்று .....?