பதறவைத்த காட்சி

கொடும் வரதட்சணைக்குக்
கண்ணு திறக்கலையே
கருணை காட்டலையே
ஏழை பெண்ணோட
வாழ்வை உயர்த்தலையே
எல்லாமறிந்த இறைவனும்
கைகொடுத்து உதவலையே!

உச்சகட்ட சண்டையிலே
ஊரே பத்தி எரிய
கருகி சாய்ந்த காதலனின்
உயிரும் பறிபோக
பச்சிளம் குழந்தையோடு
பாவிமகள் அழுத காட்சிதனை
பார்த்த மனம் பதறலாச்சே!

திக்கு தெரியாம
திசை மாறி போன அவள்
பிள்ளைக்கு பாலூட்ட
பக்கம் பார்த்து அமர்ந்தவளை
யாரோ பாவி சுட்டுவிட
சரிந்து விழுந்து
உயிர் துறந்தாள்

பெற்றவள் இறந்து கிடக்க
ஏதுமறியாக்குழந்தை
அனாதையாய் அழுதபடி
அமுதம் அருந்தும் காட்சி
அவலத்தின் உச்சம்,
மனம் என்னவோ
மாயவனையும் மன்னிக்காது.

எழுதியவர் : கோ. கணபதி. (27-Nov-16, 7:21 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 37

மேலே