உணர்தல்

இப்பொழுதுதான்
என் காதலில்
காமம் கலந்திருந்ததை
உணர்கிறேன்

இப்பொழுதுதான்
என் காதலில்
சந்தேகம் கலந்திருந்ததை
உணர்கிறேன்

இப்பொழுதுதான்
என் காதலில்
சுயநலம் கலந்திருந்ததை
உணர்கிறேன்

இப்பொழுதுதான்
என் காதலில்
ஆணாதிக்கம் ஒளிந்திருந்ததை
உணர்கிறேன்

ஆம்
இப்பொழுதுதான்
நான் உண்மை காதலை
உணர்கிறேன்

இப்பொழுதுதான்
நான் தூய்மையான காதலை
உணர்கிறேன்

இப்பொழுதுதான்
நான் முழுமையாக
காதலிக்கவில்லை என்பதை
உணர்கிறேன்

தோள் சாய்ந்து தூங்கும்
என் மகளுக்கு நன்றி

எழுதியவர் : சூரிய காந்தி (13-Dec-16, 11:45 am)
Tanglish : en magalukku nandri
பார்வை : 91

மேலே