பாவி மக ஒன் நினப்பு

அத்த மக ஒத்தையில
ஆத்தோரமா போகையில
என் மனசு தாவுறது
அவ போற பாதையில..!
அந்தி சாயும் நேரத்தில
அவ இடைமேல குடத்த வைச்சு
நீரெடுக்க போகையில
ஆத்து மீன்கள் கூத்தாடும்
இஞ்சி இடுப்பழகி அவ
சிரிச்சுப்புட்டே வந்திடுவா...!
மீச முளைச்ச காலத்தில
என் கண்ணு இரண்டும்
பாக்கிறது அவ கன்னக்குழி அழகைத்தான்....!
அன்னக்கொடி அழகியவள்
அம்சமாக போறாளே
நான் சொன்ன காதலுக்கு பதிலெதுவும் பேசாம
அமைதியா போறாளே..!
காத்திருந்து காத்திருந்து
காலமெல்லாம் வீணாகுது
சொன்னாலும் விளங்குதில்ல
அவ மூளையில பதியுதுமில்ல...!
ஆசை வச்ச என் மனசுல
பாவி மக ஒன் நினப்பு
புரியாமல் போறாளே
என் மனச தவிக்க விட்டு...!
சி.பிருந்தா
மட்டக்களப்பு.