ஹைக்கூ சாரல் 13

ஹைக்கூ சாரல் 13


1.உயர்ந்த மரம் /
ஊஞ்சல் ஆடுகிறது /
முறிந்த கிளை

2.தண்ணீரில் விழுந்து /
தள்ளாடிக் கொண்டிருக்கிறது/
நிலவு

3.ஆடம்பரத் திருமணம் /
நிரம்பி வழிகிறது /
குப்பையில் உணவு

4.சமபந்தி விருந்து /
அழையா விருந்தாளியாய் /
அவனருகில் நாய் /

5.காலடியில் நிலவு /
ஏறிப் பார்க்கிறது /
சக்கரம்

6.ஒன்றுமில்லா ஏழையை /
சொந்தம் கொண்டாடுகிறது /
கொசு

-மூர்த்தி

எழுதியவர் : moorthi (27-Dec-16, 1:07 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 94

மேலே