௨௦௧௬-ஆம் ஆண்டின் சிறந்ததுகள்

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'ஒருத்தனை ஏமாத்துனம்னா... மொதல்ல அவன் ஆசையை தூண்டனும்' விருது - 251₹ ஃபிரீடம் ஃபோன்

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'நல்ல வேளை நம்பளை மறந்துட்டாங்க!' விருது - 570 கோடி ரூபாய் கண்டெய்னர்

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'நன்றி கடிதம்' விருது - அம்மாவின் மரணத்துக்கு வந்து ஆறுதல் சொன்னவர்களுக்கு, சின்னம்மா எழுதியது

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர்' விருது - ராம்மோகன் ராவ்

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'திரும்ப திரும்ப பேசற நீ..... திரும்ப திரும்ப பேசற நீ.!' விருது – பொன்னையன்

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'திரைக்கதை ஆசிரியர்' விருது – அப்பல்லோ

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'திரைப்படம்' விருது - அந்த 75 நாட்கள்

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'மடத் தலைவர்' விருது - மதுரை ஆதீனம்

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'நாங்க புதுசா கத்துக்கிட்ட ஆங்கில வார்த்தை' விருது – Embalming

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'அம்பி- அந்நியன்' விருது - பிரதமர் மோடி

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'மோடி பண்றாரோ இல்லையோ... நீங்க நல்லா.... பண்றீங்க!' விருது – கெஜ்ரிவால்

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எப்ப வருவோம், எப்படி வருவோம்ன்னு தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவோம்' விருது - ஐ.டி. DEPT

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எப்படி இருந்த நான்..இப்படி ஆயிட்டேன்!' விருது - ஸ்ரீ தேவி ( புலி படத்துக்கு)

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'கையை நீட்டி காசு வாங்கிட்டாருன்னா, வேலையை கச்சிதமா முடிச்சி குடுத்துடுவாரு!' விருது – வைகோ

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எத்தனை சர்குலர் கொடுத்தோம்ன்னு எங்களுக்கு தெரியாது, வாங்கனவங்களுக்கும் தெரியாது' விருது – RBI

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'இவனுக்குள்ளேயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்!' விருது - ஆர்.ஜே. பாலாஜி

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'அந்த காரை வச்சிருந்த சொப்பண சுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கா!' விருது – நயன்தாரா

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'அப்படியே நீங்க காமெடி பண்ணிட்டாலும்....' விருது – சதீஷ்

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த ' அது..ஏண்டா என்னைப் பாத்து அந்தக் கேள்வியை கேட்ட?' விருது - ரங்கராஜ் பாண்டே

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'பிம்பிலிக்கி பிலாப்பி' விருது - விஜய் மல்லையா

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எட்டப்பர்' விருது - சேகர் ரெட்டி

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எவ்வளவோ பண்ணிட்டோம். இதை பண்ணமாட்டோமா' விருது – குஷ்பு

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'என்னங்க சார் உங்க சட்டம்... என்னங்க சார் உங்க திட்டம்?' விருது - மோடி அரசு

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எங்களுக்கு வேறு எங்கும் கோஷ்டிகள் இல்லை' விருது - தமிழக காங்கிரஸ்

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'மச்சி...நீ அவ சிரிச்சி பாத்ததில்லையே..!' விருது - கீர்த்தி சுரேஷ்

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'நம்பினால் நம்புங்கள்' விருது - சென்னை அமிர்தா (படிக்கும் போதே வேலை....கை நிறைய சம்பளம்.)

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த குணசித்திர நடிகர் விருது - சிநேகன் (அம்மா....என்னம்மா ஆச்சு உங்களுக்கு)

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது' விருது – தமிழிசை

• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'இங்கிலீஷ் பாட்டு' விருது - காஷ்மீர்...பியூட்டிபுல் காஷ்மீர்..!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (30-Dec-16, 8:47 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 183

மேலே