பிச்சிப்பூ வைச்சகிளி

பிச்சிப்பூ வைச்சகிளி
விழியாலே பால் கறந்து மொழியாலே வைச்ச கிளி
பொதிகையிலே பூ பறிச்சு மாமன் காதில் வைச்சகிளி
பொங்கலிலே பூமலர்ந்து மாமனுக்கு சமைஞ்ச கிளி
உச்சிமலை தேனு போல நெஞ்சினிலே இனித்த கிளி
தாழம்பூ கொண்டையிலே
பவளமல்லி தோட்டமெல்லாம்
பூ பூவா பூத்திருந்தா
மாமனவன் விழிகரங்கள்
மேனியெங்கும் மலர் பறிக்கும்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (4-Jan-17, 7:39 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 65

மேலே