உழவன்

உழவன்
**********

தன் வாழ்வெல்லாம்
ஓய்வின்றி உழுதான்,
ஊரார் உணவுக்காக,

உதிரம் உதிர
உழைத்தான்,
ஊர் நலத்திற்காக,

பகல் இரவு பாராமல்
பம்பரமாய் சுழன்றான்
நம் உலகம் சுழல,

மண்ணையே
பொன்னக்கினான்,

உயிர் கொடுத்து
விதையையே கதிராக்கினான்,

ஆற்றிலே நீரெடுத்து
பயிர் தழைக்க வைத்தான்,

சேற்றிலே கால் வைத்து
நித்தம் சோறு தந்தான்,

பக்குவமாய் விதையிட்டு,
வயல்சுற்றி பாத்திகட்டி,

முளை செழிக்க உரம்மிட்டு,
புதுஉயிராய் பயிர் துளிர்விட்டு,

தைமாதம் முதல் நாளில்
பயிர் அறுவடை,

உயிர்களின் பசிக்கு
இவன் உழைப்பே விடை.

மனோஜ்.

எழுதியவர் : மனோஜ் (6-Jan-17, 9:08 am)
Tanglish : uzhavan
பார்வை : 1982

மேலே