முதலும் முழுதும்
முடிவுறா எண்ணம்
முடிவுறா வண்ணம்
முடிந்த உறவுகளின்
முடிவுறா நினைவுகள்
முற்றுபெற வழிதேடி
மூர்ச்சையாய் நிற்கிறேன்
முகுந்தனே மூர்த்தியே மூவுலகளந்தோனே
முழுவதும் மறந்து
முதலும் முடிவும் முழுவதும் நீயென முற்றுறச் செய்வாய்
சிந்தையின் வெற்று விந்தைகளை...!!!!