சிந்திப்பாய் மனிதா

சல்லிக்கட்டுக்காக போராடுபவர்களே

நாம் இழந்தது கொஞ்சமல்ல
நிறைய
எங்கும் எதிலும்

இதோ பாருங்கள்

சிறிய பொட்டிக் கடையிலிருந்து
பெரிய மால் வரை
கிடைக்கும் பானம் கோக்
பெப்சி வகையரா
மட்டுமே தண்ணீரையும்
சேர்த்து.
வணிகம்.

சிறிய குழந்தைகள்
தேவை முதல்
பெரியவர் பல்துலக்கி குளிக்கும் வரை
அனைத்தும் Nestle Colgate Unilever cadbury pepsodent lux dove amway etc.
வணிகம்.

வீடு சுத்தம் செய்வது முதல்
டாய்லட் கழுவும் வரை
Harpic lyzol etc.
வணிகம்.

நம் வீட்டு நாயெல்லாம் தெருநாய் ஆச்சு
வெளிநாட்டு நாய் நம் மோகமாச்சு.
வணிகம்.

நாட்டுக்கோழி போய்
போந்தா கோழியாச்சு
வணிகம்.

நாட்டுக் காய்கறி போய்
Pesticides காய்கறிகள்.
வணிகம்.

இப்படி
காவிரி தண்ணீர்
மணல் கொள்ளை
விவசாயி தற்கொலை
கல்வியில் வேறுபாடுனு
பல பிரச்சனைகள்
இருக்கு..

சல்லிக்கட்டு முதல்
போராட்டமாய் இருக்கட்டும்..

சிந்திப்போம்
போராடுவோம்
வெல்வோம்.

எழுதியவர் : முனைவர் அன்பரசு (20-Jan-17, 5:11 pm)
சேர்த்தது : anbarasukv
பார்வை : 64

மேலே