குருதி சுத்தரிப்புக் கருவி Dialyser
அன்று விஞ்ஞான ஆசிரியர் தோமஸ் தொழில் நுட்பத்தைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் எப்போதும் விஞ்ஞான தத்துவங்களை விளக்கும்போது ஒரு கதையைச் சொல்லி மாணவர்களுக்குவிளங்க வைப்பது அவர் வழமை. அன்று தனது கதையை ஆரம்பித்தார்
“ஸ்டுடன்ஸ் உங்களுக்கு நான் சொல்லும் கதை கற்பனைக்கதை, ஆனாலும் உங்களை அறிவியல் ரீதியாகச் சிந்திக்கவைக்கும். இக்கதை ஆங்கிலத்தில் ஜொனாதன் ஸ்விஃப்ட் என்பவர் 18 ஆம் நூற்றாண்டில் சிறுவர்களுக்கான கலிவர்லில்ப்புட்; பயணங்கள் என்ற தலைப்பில் எழுதிய கதைகளில் ஒன்று”, என்று கதை எழுதிய ஆசிரியர் அறிமுகத்தோடுஆரம்பித்தார்.
“ கதையைச் சொல்லுங்கோ சேர்.; கேட்க நாங்கள் ரெடி”, மாணவர்கள் ஒருமித்துச் சொன்னார்கள்:
“கலிவர் என்ற கப்பலோட்டி பல தீவுகளுக்குப் பயணம் செய்து, பலவிதமான மக்களைச் சந்தித்து அவர்களைப்பற்றிஅறிபவர். இப்படி ஒரு நாள் கப்பலில் பயணம் செய்த போது கடுமையான புயல் அவரது கப்பலை தாக்கிச் சிதைத்தது. நல்லகாலம் கலிவர் உயிர்தப்பி, நீந்தி, ஒரு தீவை அடைந்தார். களைப்பால் அவர் கடலோரமாகத் தூங்கிவிட்டார். சிலமணி நேரத்துக்குப் பின் அவர் கண்விழித்து எழுந்தபோது, தனது உடலை அவரால் நகர்த்த முடியவில்லை. ஏன் தன்னால்நகர முடியவில்லை என அவர் பார்த்த போது, தன் உடல் மீது ஆறு அங்குலத்துக்குக் குறைவான உயரம் உள்ள சிறியமனிதர்கள் நூற்றுக்கணக்கானோர் தன்னை கயிற்றால் கட்டியிருந்ததைப் பார்த்தார். அந்த மிகச் சிறிய தோற்றமுள்ள மனிதர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டார். இவ்வளவு சிறிய மனிதர்களுக்கு ஒரு பெரிய மனிதனைச்
சிறைபிடிக்க அவ்ளவுசக்தி உண்டா என யோசித்தார். தான் லிலிபுட் தீவுமக்களுக்கு தான் ஒரு தீங்கும் செய்யமாட்டேன். அவர்களுக்கு வேண்டியஉதவி அளிக்கத் தயார் என்றார் கலிவர்;. அத்தீவு மக்கள் அவரை விடுதலைசெய்து தமக்கு பக்கத்துத் தீவு மக்களோடுபோர் செய்ய உதவும்படி கேட்டார்கள். அவரும் சிறிய உருவம் கொண்ட அண்டைய நாட்டு மக்களோடு போர் செய்துலிலிபுட் மக்கள் வெற்றிபெற உதவினார் கவிவர்;. லிலிபுட்
மக்களும் அவரைத் தங்கள் ஹீரோவாக்கி;, தங்கள் ராஜாவின்படைத் தளபதியாக்கினார்கள்;. காலப்போக்கில் தான் பிரிந்து வாழும் தன் குடும்பத்தைக் காண வேண்டும் என்று கலிவர்கேட்டதினால் அவரின் சிதைந்த கப்பலைத் திருத்தி அமைத்து அவரை குடம்பத்தோடு போய் இணைய உதவினார்கள்அத்தீவு மக்கள். எப்படி இருந்தது கதை”? கதையைச் சொல்லி முடித்ததும், ஆசிரியர் தோமஸ் மாணவர்களைப் பார்த்துகேட்டார்.
” சேர் நல்ல கற்பனைக் கதை சேர். இது உண்மையிலேயே நடக்கக் கூடிய கதையா சேர்”? மாணவர்களில் ஒருவானானமாறன் கேட்டான்.
“ ஏன் முடியாது? குள்ளமான மனிதர்கள் உலகில் வாழ்கிறார்கள். ஏன் அறிவியலைப் பாவித்து மிகச் சிறிய கருவிகளைஉருவாக்கமுடியும் தானே. இதை ஆங்கிலத்தில் நனோதொழினுட்பம் ( நாணய Technology) என்பார்கள். அதைஅறிமுகப்படுத்தவே இக்கதையை உங்களுக்குச் சொன்னேன்”
“ நனோ என்றால் என்ன சேர்” மாறனுக்குப் பக்கத்தில் இருநத அவன் நண்பன் சேரன் கேட்டான்.
“ நனோ என்பது ஆங்கிலத்தில் மிக நுண்ணிய அலகைக் குறிக்கும். அதாவது ஒரு பில்லியன் அளவு சிறிதான அளவாகும். ஒரு பில்லியனில் ஒன்பது சைபர்கள் உண்டு அதனால் நனோ என்பர். அதனைக் கணிதத்தில் 10−9 எனக் குறிப்பிடுவார்கள். இது நேரத்திலும், நீளத்திலும் பாவிக்கும் நுண்ணிய அலகாகும்”இ ஆசிரியர் விளக்கினார்.
;
“ அடேயப்பா அவ்வளவு சின்ன அலகா சேர். அப்போது கண்ணுக்குத் தெரியாது என்று சொல்;லுஙகோ”, மாறன் கேட்டான்
“ விரலில் உள்ள நகம் ஒரு செகண்டில் வளரும் நீளம் என்று
எடுத்துககொள்ளுஙகள். ஒரு நனோ செக்கண்ட் நேரத்தில்; ஒளியானது 30 செமீ தூரம் செல்லும் என்றால்பாரத்துக்கோள்ளுங்களேன். பொதுவாக ஒரு மனிதனின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிமனானது. புகையிலைப் புகையின் மிகச்சிறிய துணுக்கு 10 நானோமீட்டர்கள்” ஆசிரியர் நனோ அளவுக்கு விளக்கம் கொடுத்தார்
“ அப்போ மாலைதீவு போன்ற சிறிய தீவுகளில் நிலம் குறைவாக இருப்பதால்; வீடுகள், பெரிய கட்டிங்கள் கட்ட நிலம்இருக்காது. அந்தப் பிரச்சனைக்கு வருங்காலத்தில் நனோ தொழில் நுட்பம் மூலம் தீர்வுகாணலாமா சேர்”? மாறன்கேட்டான்.
“ மாறா நீ நல்ல அறிவியலாகச் சிந்திக்கிறாய். நானோ தொழில்நுட்பம் என்பது உண்மையிலேயே பல துறைகளில்தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. அதனால் நானோ தொழினுட்பங்கள் என்று பன்மையில் அழைக்கப்பட வேண்டியஒன்று. காரணம் நானோ தொழில்நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கவில்லை, மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கத்தைஏற்படுத்தி வருகின்றது. அமெரிக்காவின் நெசனல் நானோ தொழில்நுட்பம் என்ற நிறுவனம் இதன் வளரச்சிக்குஉதவுகிறது. மாறன் உனக்கு அதில் தொழில்நுட்பவாதியாக வர விரும்பினால் அந்தத் துறையில் படித்து வரப் பார்” என்றார் தோமஸ்.
********
மாறனும்; சேரனும் எட்டாம் வகுப்பில் இருந்து பள்ளி தோழர்கள். நண்பர்கள் வேறு. மாறனுக்கு தொழில்நட்பத்தை தவிரவேறு துறைகளில் அக்கறை இல்லை. அவன் நண்பன்; சேரனுக்கு மருத்துவம் சார்ந்த அறிவியல் துறையில் ஆர்வம்இருந்தது. அடிக்கடி இருவரும்; சந்தித்து மருத்துவ துறையில் நனோ தோழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்தலாம் எனதிட்டமிட்டார்கள்.
“மாறா நான் சிறுநீரக வியாதிக்கான மருத்துவத்தில் பயிற்சி பெற்ற டாக்டர். நீயே ஒரு நனோ தொழில் நுட்பவாதியாகிவிட்டாய். இருவரும் இணைந்து குருதி சுத்தரிப்பு என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் டயாலிஸ் செய்வதற்குச் சிறியகருவியைக் கண்டு பிடிக்க வேண்டும். நீ என்ன நினைக்கிறாய்”?
“ சேரா நீ எனக்கு முதலில் டயலாசிஸ் என்றால் என்ன என்று விளங்கப்படுத்து”.
“அசுத்த ரத்தத்தைச் செயற்கைமுறையில் சுத்தப்படுத்துவதுதான் ஹீமோடயாலிசிஸ். டயாலிசிஸ் சிகிச்சையின்போது, ரத்தத்தில் உள்ள நச்சுக்கள், நீர் உள்ளிட்டவை எந்திரங்கள் உதவியுடன் நீக்கப்பட்டும். இதற்கு, உடலில் இருந்து ஒரு ட்யூப்வழியாக ரத்தம் டயாலிசிஸ் இயந்திரத்துக்குள் அனுப்பப்படும். அங்கு அது சுத்திகரித்து, மற்றொரு குழாய் வழியாகஉடலுக்குள் திரும்ப அளிக்கப்படும். சிறுநீரகம் செயல் இழுநதுவிட்டால் டயாலிசி;ஸ் செய்யவேண்டும் அல்லதுசிறுநீரகத்தை மாற்றவேண்டும்.” டாக்டர சேரன் சொன்னார்.
“டயாhலிசிஸ செய்யும்; மெஷின் பெரிசா? எவ்வளவு நேரம் டயாலிசிஸ செய்யவேண்டும்.
" சுமார் நான்கு மணி;, பருமனான மெஷனோடு ; இரத்த சுத்தி செய்யவேண்டும்”
"நான் உங்கள் மருத்துவ அறிவைப் பாவித்து; சிறுவடிவமைப்பு உள்ள மிகச் சிறிய இயந்திரத்தை உருவாக்கப்போகிறேன்.; உதாரணத்துக்கு நான் ஹோட்டல் இருக்கிறேன் என்றால் எனக்குச் சிறு நீரக வயாதிபாதிப்பிருநதால் போது இரவுநேரத்தில் பயன்படுத்த முடியும்" மாறன் பதில் சொன்னான்;
“ ஆனால் மாறா முதன் முறையாக டயாலிசிஸ் செய்யும்போது, தற்காலிகமாக கழுத்துப் பகுதியில் சிறு துளையிட்டுகுழாய்கள் பொருத்தப்படும். அதேநேரத்தில், கையில் ஆர்டீரியோவீனஸ் ஃபிஸ்டுலா (யுசவநசழைஎநழெரளகளைவரடய) எனும் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதாவது, இவர்கள் இடது கை மணிக்கட்டுக்கும்முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, சிறிய இயந்திரம்பொருத்தப்படும். இது, ரத்தத்தை போதுமான அழுத்தத்தில் டயாலிசிஸ் இயந்திரத்துக்குள் செலுத்த உதவும். இந்தஅறுவைசிகிச்சை செய்து ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை, கழுத்துப் பகுதியில் குழாய் வழியாகடயாலிசிஸ் செய்யப்படும். ஃபிஸ்டுலா தயாரானதும், கையில் உள்ள ரத்தக் குழாய் வழியே டயாலிசிஸ் செய்யப்படும். இந்தமுறையில், மணிக்கட்டு பகுதியில் உள்ள நல்ல ரத்தம் செல்லும் பெரிய ரத்தநாளத்திலும் (Artery), அசுத்த ரத்தம்செல்லும் சிறிய ரத்தநாளத்திலும் (Vein) ரத்தம் ஏற்றுவதுபோல ஊசி குழாய் செலுத்தப்படும். உடலில் இருந்து வரும் கெட்டரத்தம், டயலைஸர் (Dialyser) இயந்திரத்துக்குள் செல்லும். இந்த இயந்திரத்தின் உள்ளே டயாலிசேட் (Dialysate) எனும் திரவம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும். டயலைஸரின் உட்பகுதியில் உள்ள ஃபைபர்கள், வேண்டாதசிவப்பணுக்கள், நீர் மற்றும் கழிவுகளை வடிகட்டும். சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் மட்டும் மீண்டும் உடலுக்குச் சென்றுவிடும். நோயாளிகளின் பாதிப்புக்குத் தகுந்தவாறு வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் மேற்கொள்ளவேண்டும். டயாலிசிஸ் செய்வதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும். வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ்செய்தாலும், சிறுநீரகத்தின் வேலையில் 30 சதவிகிதம்தான் நிகழும். வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த டயாலிசிஸ் முறைஏற்றது. ஆனால், வேலைக்குச் செல்பவர்களுக்கு டயாலிசிஸ் உகந்தமுறை அல்ல. இவர்கள் சிறுநீரக மாற்றுஅறுவைசிகிச்சை செய்துகொள்வதே சிறந்தது;. உனது மாமா பாவிக்கும் இருதய முடுக்கி என்ற பேஸ் மேக்கர் பற்றி நீஅறிந்திருப்பாயே அக்கருவி நனோ தொழில்நுட்பத்தில் உருவாகிய கருவி. இருதய துடிப்பு ஒரு நிமிடத்துக்கு 50 க்குகுறைந்தவர்களுக்கு இந்தக் கருவி தேவைப்படுகிறது” டாக்டர் சேரன் சொன்னார்.
தாங்கள் இருவரும் சேர்ந்து அதுபோன்ற கருவியை நீரக வியாதியாளர்கள் பாவிப்பதற்கு உருவாக்க தீர்மானித்தார்கள். நண்பர்கள் இருவரும் தமது ஆராச்சியை தொடர்ந்து செய்து வெற்றியும் கண்டார்கள். ஆறு ஆங்கிலம் பருமன் உள்ளமிகச்சிறிய குருதி சுத்தரிப்பு இயந்திரத்தை உருவாக்கினார்கள். அந்த இயந்திரம் பின்தங்கிய நாட்டு மக்களுக்கு பெரும்உதவியாக இருந்தது. குறைந்த செலவில் டயலாசிஸ் செய்யக் கூடியதாகவும்> வேலை நிமித்தம் பல நாடுகளுக்குப்பயணம் செய்யும் நீரகவியாதி உள்ளவர்கள், தாமே நேர்சின் உதவி இல்லாமல் பாவிக்கக் கூடியதாக அக்கருவி இருந்தது
*******.