சுவரின் சொந்தங்கள்
வாழ்க்கையின் தேடலில்..
முதலில் ,
நேரத்தை காதலி என்றார்கள் ,காதலித்தேன்
நேரத்தோடு பயணிக்கும் நாட்களை காதலி என்றார்கள் ,காதலித்தேன்
ஒவ்வொரு விடியலையும் காதலி என்றார்கள் ,காதலித்தேன்
விடியலோடு வாசம் செய்யும் விருந்தினரை காதலி என்றார்கள் ,காதலித்தேன்
மலர்களை காதலி என்றார்கள் ,காதலித்தேன்
மலர்களோடு வசிக்கும் மணங்களை காதலி என்றார்கள் ,காதலித்தேன்
படிக்கும் பாடத்தை காதலி என்றார்கள் ,காதலித்தேன்
சுமையோடு வரும் சுகங்களை காதலி என்றார்கள் ,காதலித்தேன்
வலியோடு வரும் வேதனையை காதலி என்றார்கள் ,காதலித்தேன்
உண்மை பேசும் உள்ளங்களையும் ,
மழலை போன்ற நெஞ்சங்களையும் காதலி என்றார்கள் ,காதலித்தேன்
உறக்கத்தில் வரும் கற்பனையையும் ,
உன்னை உறங்கவிடாமல் திணிக்கும் கனவினையும் காதலி என்றார்கள், காதலித்தேன்
பாம்பின் விஷம் கொண்ட பகைவனையும் காதலி என்றார்கள் ,காதலித்தேன்
கடைசியில்
இரு இதயம் இணைந்து
என் வாழ்வோடு பயணம் செய்யப்போகும்
உன்னை நான் காதலிக்க மட்டும்
ஏன் போர்க்கொடி தூக்கி நிற்கிறார்கள்
இந்த ஊனமற்ற உருவங்கள் ...??