என் காதல் மாறாதடி

என் காதல் மாறாதடி!
அழகினை கண்டு காமம் கொண்டு கானல் நீராய் போவதல்லடி என் காதல்!
அன்பை கண்டு காதல் கொண்டு வாழ்நாள் வரை கூட வருவதே என் காதல்!
காட்சிகள் மாறலாம் தோற்றங்கள் மாறலாம்
என் மேல் நீ கொண்ட காதல் கூட மாறலாம்
ஆனால் உன் மேல் நான் கொண்ட காதல் மாறாதடி!
கல்லில் வடித்த உருவமும் காலத்தால் சிதையலாம்
என்னவளே என்னில் வடித்த உன் உருவம்
மறையாதடி என் மரணம் வரை ......
ஏனெனில் உன்னை வடித்ததோ என் எண்ணத்தில் இல்லயடி
.................... என் இதயத்திலடி!