இன்றைய அரசியல் ஒரு சினிமா
எங்கு நோக்கிலும் அரசியல் விளம்பரம்...
கல்யாண போஷ்டர்களில் கூட...
மக்களைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளின் அராஜகம்...
கூலிப்படைகளை ஏவி வேண்டாதவர்களின் கதைமுடிப்பதும் அவர்களே...
ஊடகங்களில் பொலீஷ் தூங்குகிறதா? என்று கேள்வி எழுப்பி குற்றங்களின் புள்ளிவிவரங்களை ஊடகங்களை விட தெளிவாக எழுதுவதும் அவர்களே....
எழுதுகோல் சக்திவாய்ந்தது எனினும் அது கபட வேடதாரிகளின் கைகளில் சிக்கி,
உண்மையைக் கொலை செய்யப் பயன்படுகிறது என்பதே யாராலும் மறுக்கமுடியாத உண்மை....
பணம் தந்தால் புகழ்கிறது ஊடகம்...
பணம் தராவிட்டால் இகழ்கிறது ஊடகம்...
நேர்மையான அதிகாரிகளை இடமாற்றம் செய்வதும்,
பணியிடை நீக்கம் செய்வதும் இந்த அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையே....
குற்றவாளிகளையெல்லாம் சிறையில் அடைத்து தண்டனை கொடுக்கலாமென்ற அதிகாரம் மட்டும் மக்களிடம் கிடைத்துவிட்டால் முதலில் தண்டனைக் குள்ளாக்கப்படுபவர்கள் அரசியல்வாதிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையில் சில குள்ளநரிகள் போன்றோரே ஆவர்...
வயிற்றுப்பசிக்காகத் திருடிவனை பிடித்து அடித்து பிழிந்தெடுக்கிறார்கள் சிறைச்சாலையிலே...
ஆடம்பரத்திற்காக திருடியவனோ ஆடம்பரமாக வாழ்கிறான் சிறைச்சாலையிலே....