தேவகன்னி
இன்று கடல்கரைக்கு ஒரு
தேவதையின் வருகை
கடற்கரை மணலெல்லாம்
அவளின் பாத சுவடுகள்
அலைகலெல்லாம் அதை
முத்தமிட்டு மகிழ்கின்றன
அலையோசை மாறி
அவளின்
வலையோசை ஒலிக்கிறது
கடற்கரை காற்றுக்கும்
அவள் மேல் மையல்
கொள்ள ஆசை
இன்று கடல் நீரும்
குடிநீராய் மாறிய அதிசயம்
தென்னங்கீற்றும் தென்றல்
காற்றும் முத்தமிட்டு
மோகவலை பின்னுகின்றன
தண்ணீரை வெறுத்து
கடற்கரையில் வாழ திட்டம்
தீட்டுது மீன் கூட்டமெல்லாம்
இந்த தேவதையின்
வருகையாலே...