எத்தனை அற்புதம்

பசுமை நிறைந்த
நிலங்கள் !

அமைதி பேசும்
காற்று !

எட்டா தூரம்வரை
சமுத்திரம் !

கதை சொல்லும்
அலைகள் !

எத்தனை அற்புதம்
உன் படைப்பில் !

உயிருக்குள் உயிரை
சுமக்கும் பெண் !

ஈ்ருயிரை காக்க
போராடும் ஆண் !

எத்தனை அற்புதம்
உன் படைப்பில் !

எல்லாம் படைத்தாய்
சரியாய் !

எல்லாமும் இருந்தது
சரியாய் !

பின் ஏனிந்த
மாற்றம் !

ஏன் இந்த
சீரழிவு !

ஏன் இந்த
அவல நிலை !

எந்த அற்புதம்
நிகழ்த்தவோ இத்தனயும் !

எழுதியவர் : புகழ்விழி (24-Mar-17, 8:40 pm)
Tanglish : ethtnai arpudham
பார்வை : 227

மேலே