பேசும் பூச்செண்டே

வெள்ளை ரோசா பூச்செண்டே
என்னவளிடம் சொல்லு
நெற்றுக்கதை நேற்றோடு போயிற்று,
அந்த சிற்றூடலுக்கு
முற்றுப்புள்ளி வைத்து
உன்னை அவள் தோழியாய் பாவித்து
ஏற்றுக் கொண்டு
என் இந்த மலர்ச்செண்டுவிடும் தூதை
காதலன் நான் விடும்
அமைதி தூது என்று கூறி
எப்படியேனும் எங்களை
சேர்த்துவிடு நான் அறிவேன்
நீ வெறும் பூக்களால் கோர்க்கப்பட்ட
பூச்செண்டு அல்ல
உடைந்த உள்ளங்களை
சேர்த்துவைக்கும்
மலர்த் தூதுவன் நீ
பேசும் பூக்கள் பூச்செண்டே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Mar-17, 9:45 pm)
பார்வை : 105

மேலே