காத்திருப்பு - சகி
என்னுயிரே .......
தினம் தினம்
நமக்குள் காதல்
போர் தான் ......
சிலநாட்களில் உன்கோபத்தில்
நான் இன்பக்காக தோற்றுப்போவேன் .......
என்னிடத்தில் செல்லமாக
நீ தோற்றுபோவாய்.......
பேசவே கூடாதென
அரபுமண்ணில் நீயும் ....
உன் அழைப்புக்காகவும்
என் கோபத்தை சீண்டிப்பார்க்கும் குறுச்செய்தியும் எதிர்பார்த்து
நம்மண்ணிலே உன்வரவையும்
எண்ணி காத்திருக்கிறேன் ......
சில இரவுகள்
என்விழிகளுக்கு உறக்கமே
இல்லை என்பதை அறிவாயோ
என்னவனே .....
என்னருகே வந்துவிடு .....
தொலைதூர ஊடல்
போதுமே ........
அருகருகே அமர்ந்து
உன்னை நானும்
என்னை நீயும்
ரசித்த வண்ணம்
காதல் போர் புரிவோம் ........
வெற்றி நம்
காதலுக்கு மட்டுமே .......