யாரோ ஒருவன் போல

அளவில்லா ஆசைகள்!
எவ்வளவோ எதிப்பார்ப்புகள்!
இப்படி எத்தனையோ
அவள்மீது எனக்கிருந்தும்
அவள் கடந்து செல்லும்போது
மட்டுமேன் ஓர் கல்லாய் அசைவேதும்
இல்லாமல் இருந்துவிடுகிறேன்...
யாரோ ஒருவள் போல
நான் அவளைக் கடந்துவிடுகிறேன்...
அவள் நினைவுகளிலே
நாள் முழுக்க உழன்றாலும்
என் எதிரிலே இருக்கும்போது
எப்படியோ நடித்துவிடுகிறேன்
என்னுள் எதுவும் இல்லாதவன்போல்
யாரோ ஒருவன் போல்...
என்ன செய்வேன் என் கண்மணியே?
எனது எழுத்துக்களில் எண்ணங்களை
வடித்து வண்ணங்களாய் எழுதிவிட்டு
உன்முன் ஓர் ஊமையாய் நிற்பதைத்
தவிர வென்றொன்றும் நான் அறியவில்லை...