காணி நிலம்

காணி நிலம்!
நேற்று வரை,
எனக்குள் ஓர் ஆசை, ஆட்டிப்படைத்தது,
காணிநிலம் வேண்டுமென்று!
இன்று...
பல காணி நிலம் வைத்திருப்போர், கடனாளியாய்!
டெல்லியில் அரசிடம் மன்றாடும் விவசாயிகளின், நிலை கண்டபின்னே,
காணி நிலம் வேண்டுமென்ற ஆசை பறந்தது,
ஆடிமாசக் காற்றில், நின்னு பேச நேரமில்லை என்று,
பறக்கும் கொக்கரகோழிச் செடியாய்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (7-Apr-17, 4:09 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : kaani nilam
பார்வை : 55

மேலே