இளைஞனின் குரல்
வீட்டில் ஏதாவது பிரச்சனைக்கு நியாயத்தை எடுத்துரைத்தால், " நீ சின்ன பையன். உனக்கு விபரம் பத்தாது. ", என்று கூறி மட்டம் தட்டுகிறார்கள் பெற்றோர்கள்...
கல்லூரியில், " ஆங்கிலத்தில் பேசு. அதுவும் பாடத்தைப் பற்றி பேசு. தமிழில் பேசாதே. ஆங்கிலம் உனக்கு வேலை வாங்கித் தரும். ", என்று மாணவர்களைத் தூண்டுகிறார்களே தவிர, சுய சிந்தனை, அறிவு, மாணவனின் தனித்திறமைகளைப் பற்றி பேச விடுவதே இல்லை அழகுத் தமிழில்...
சமூகத்தில் நடக்கும் அநீதி, ஊழல்கள் குறித்து கேள்விகள் எழுப்பினால், " நீ சிறுவன். உனக்கு எங்கு எப்படி பேச வேண்டுமென்று தெரியாது. ", என்று கூறி, எங்களுடைய நல்லுணர்ச்சிகளையும், திறமைகளையும் நீங்கள் மட்டம் தட்டிக் கொண்டிருப்பதாலேயே இந்த நிலையில் இருக்குது இந்த நாடு...
எங்கள் கிராமத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள், " வாத்தியார் குசுவுனா தப்பில்ல. மாணவன் குசுவுனா தான் தப்பு. ", என்று...
அதற்கு ஏற்றாற் போலவே அனுபவமிக்க, வயதில் பெரியவர்களின் எண்ணங்களும், செயல்களாய் வெளிப்படுகின்றன அறிவிற்குச் சிறிதும் சமந்தமில்லாததவையாய்...
இளைஞர்களே ஒன்று கூடுவோம்...
நம்மை மட்டம் தட்டும் பெரிய மனிதர்களின் முகத்திரை கிழித்தெறிவோம்...