முதிரா கன்னி 3

ஓர் இரவு நேரம்...

'யோவ்...வாய்யா போய் சாப்பிட்டு வரலாம்...'

'இல்ல மாப்ள ...நான் சாப்பிட்டேன்...'

என்னை விட்டுட்டு எப்பய்யா சாப்புட்டே...'

'ஸாரி மாப்ளே,சாயாந்தரம் வீட்டுகார ஆன்ட்டி சிக்கன் எடுத்துட்டு வரச்சொன்னாங்க. எடுத்தாந்து கொடுத்தேன்.நைட்டு இங்கே சாப்பிடுன்னு சொன்னாங்க,உன்னை கூப்பிட்டா வரமாட்ட...அதான் நான் போய் சாப்பிட்டேன்...'

வந்த எடத்துல வாழை இலை சாப்பாடா...?நடத்து...நடத்து... இதுக்காகத்தான் நைட் ஷிப்ட் கேட்டு வாங்கறதா...'

'ச்சே...ச்சே...அதெல்லாம் ஒண்ணுமில்ல மாப்ளே...ஏதோ பாசத்துல கூப்புட்டாங்க அவ்வளவுதான்...'

சரி...சரி... பாத்து வீட்டுக்காரன் நம்மள காலி பண்ணாம இருந்தா சரி...அப்ப எனக்கு இன்னைக்கும் வழக்கம்போல கையேந்திபவன்தானா...'

சென்னையில் வீட்டுக்கு அடுத்தபடியா சாப்பாடு ஒரு பெருஞ்சிரமம்.சாலையோர கையேந்திபவன்கள் இல்லாவிட்டால் பேச்சிலர்ஸ் பாடு ரொம்ப சிரமம்...'

அப்புறம் ஒருநாள் வீட்டுகார அம்மா இரண்டு பேரை கூட்டி வந்தார்கள். ஒரு ஆண்,ஒரு பெண்.

'இவங்க இன்னைலேர்ந்து அந்த பக்கத்து ரூம்ல தங்க போறாங்க... புதுசா கல்யாணம் ஆனவங்க...வால கீல ஆட்டாம ஒழுங்கா இருக்கணும் சரியா...'

சரியென்று தலை அசைத்தோம்.

அந்தாளுக்கு முப்பது வயதிருக்கலாம்.அந்த பெண்ணுக்கு அவளாய் முடிவெடுக்கும் வயதிருக்கலாம்.கழுத்தில் புதுத்தாலி மஞ்சளின் ஈரம் காயாமலிருந்தது.முகம் முழுவதும் வெட்கம் படர்ந்திருந்தது.புதிதாய் கல்யாணம் ஆன பூரிப்பு. கனவுகளும்,ஏக்கங்களும் கண்களில் வழிந்தன.நல்ல சிவந்த நிறந்தான். அந்தாள் மாநிறம்.புது பேண்ட் சர்ட் அணிந்திருந்தான்.கையில் ஒரு ட்ராலி பேக்.அவ்வளவுதான்.ஒரு சின்ன அறிமுகபடுத்தலுக்கு பிறகு வீட்டுக்குள் நுழைந்து கதவை அடைத்து கொண்டு விட்டார்கள்.

'சரி,விட்டுடு...புதுமணத் தம்பதிகள் சந்தோசமா இருக்கட்டும்...'

'ஏன் மாப்ள...வால கீல ஆட்டாம இருக்கணும்னு ஆன்ட்டி சொல்லிட்டு போனாங்களே...நமக்கு ஏது மாப்ள வாலு...?'

'ஆன்ட்டிதானே சொன்னாங்க...அத அவங்ககிட்டேயே கேக்க வேண்டியதுதானே...?'

'சரி...அப்ப ஆன்ட்டிகிட்டேயே கேட்டுறவா...?'

'யோவ்,சும்மா இருய்யா...ஏதாவது ஏழரைய கூட்டாம...இதுக்கு வேணும்னா ஒரு குட்டி கதை சொல்றேன்.நீயே புரிஞ்சுக்க...'

'நகரத்து பையன் ஒருத்தன் கிராமத்துக்கு போனான்.அங்கே ஒரு பெரிய காடு.அந்த காட்ட பாத்ததும், அத சுத்தி பாக்கணும்னு ஆசை. காட்டுக்குள்ள போய் நல்லா அலைஞ்சி திரிஞ்சு சுத்தி பார்த்தான். காட்டுக்குள்ள அருவி ஒண்ணு 'சோண்ணு' கொட்டிகிட்டிருந்தது. அதை பார்த்ததும் அவனுக்கு குளிக்கனும்னு ஆசை வந்திருச்சு. பட்டணத்துல பாத்ரூமுக்குள்ள பக்கெட் தண்ணியில குளிச்சு குளிச்சு பழகிப்போன அவனுக்கு அருவிய பார்த்ததும் ஒரே குஸி.உடனே ட்ரெஸ் எல்லாத்தையும் கழட்டிட்டு நிர்வாணமா குளிக்கிறான்.குளிச்சு முடிச்சுட்டு மேல வர்றான்.மேல வந்ததும் பக்கத்து மரத்துல இருந்த ஒரு அணிலு இவன பார்த்து சிரிச்சது. இவனும் டென்ஸனாயி 'அணிலே என்ன பார்த்து எதுக்கு சிரிக்கிறேன்னு'கேக்குறான்.அதுக்கு அணிலு 'இல்ல,எங்களுக்கெல்லாம் வாலு பின்னாடிதான் இருக்கும். உனக்கு மட்டும் வாலு முன்னாடி இருக்கே.அதப் பார்த்துதான் சிரிச்சேன்'ன்னுச்சான்.

'இப்பவாவது புரிஞ்சுச்சா... வாலுன்னா என்னன்னு...'

தொடரும்...

எழுதியவர் : பனவை பாலா (11-Apr-17, 12:46 pm)
சேர்த்தது : பனவை பாலா
பார்வை : 369

மேலே