சிகரமும் சிறு துரும்பாய் மாறும் 555
என் தோழியே...
சுற்றும் பூமி நிற்கப்போவதில்லை
சுழற்சி என்பது எப்போதும் உண்டு...
வாழ்க்கையின் வட்டம்கூட சக்கரம்
போல சுற்றிக்கொண்டே இருக்கும்...
இன்பமும் துன்பமும் மாறிமாறி
வந்துகொண்டே இருக்கும்...
ஒவ்வொரு நிகழ்வும்
உன்னை திசைமாற்றும்...
பல நேரங்களில் உன்னை
பயமுறுத்தும்...
என் தோழியே நீ
பொறுமையோடு போராடினால்...
எந்நாளும் உனக்கு
பெருமைதான்...
உன்னை துன்பங்கள்
சூழ்ந்திடும் போதெல்லாம்...
நீ மனம் தளராமல் பொறுமையோடு
சிந்தித்து போராடினால்...
சிகரமளவு கொண்ட துன்பமும்
சிறு துரும்பாய் மாறிவிடும்...
தன்னம்பிக்கை என்றும்
உன்னோடு கைரேகை போல...
இணைந்தே இருக்க
வேண்டும் என் தோழியே.....