மந்திரம்

இசைப்பாடல்

மந்திரம் பண்ணப்போறேன் - புதுசா
மந்திரம் பண்ணப்போறேன்
தந்திரம் எல்லாம் தடுக்கி விழுக
மந்திரம் பண்ணப்போறேன் !

சந்திரனப் புடிச்சுக் - கடிக்க
. சப்பாத்தி ஆக்கப்போறேன் !
. சாட்டை அடிகொடுத்து - மேகத்த
. சாறு எடுக்கப்போறேன்

மந்திரி மன்னரெல்லாம் - பணிஞ்சிட
. மந்திரம் பண்ணப்போறேன் !
. மண்ணில் வெளிச்சம்வர - சூரியன
. மச்சில் நிறுத்தப்போறேன் !

எந்திர மேதுமில்ல - வித்தயாம்
. ஏதும் படிக்கவில்ல
. எங்கேயும் கற்றதில்ல - எனக்கு
. எவரும் சொல்லவில்ல !

மந்திரம் என்னதுன்னு - தெரிஞ்சிக்க
. மனசில் ஆசையுண்டா ?
. மந்திரந் தான்போடுவேன் - கவிதை
. மட்டுந்தான் நான்பாடுவேன் !

அந்தக் கவிதையில - அருள
. அள்ளிக் கொடுத்திடுவா !
. ஆமந்த மாரியம்மா - எனக்கும்
. ஆண விடுத்திடுவா !

உடனே மந்திரம் போட்டுடுவேன் !
ஆமா ! மந்திரம் போட்டுடுவேன் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (12-Apr-17, 11:34 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 52

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே