சூரிய தாகம்

சூரிய தாகம் !
கவிதை by: பூ.சுப்ரமணியன்

ஏரி குளம் கிணற்றுநீர்
வாரிக் குடித்த பின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?

ஏழையின் நரம்புபோல்
ஈரம் காணாத நிலம்
வெடிப்பு கண்ட பின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?

கங்கைநீர் சுமந்து செல்லும்
மங்கையர் குடம் கூட
தண்ணீரின்றி ஆடுவதை
கண்ணால் கண்டபின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?

தண்ணீர் தாகம் தணிக்க
காட்டில் சுற்றித் திரியும்
யானைகள் மான்கள்
வீட்டினைச் சுற்றி சுற்றி
சட்டி பானை உருட்டுவதை
எட்டிப் பார்த்த பின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?

சூரியனே உன் தாகம்
தணிக்க குறைய
விண்ணிலே காட்டு
மண்ணிலே காட்டாதே !

விண்ணிலே
கருமேகங்களை கூட்டி
உயிர்கள் தாகம் தணிக்க
ஏரி குளம் நீரால் நிரப்பு !!

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (18-Apr-17, 6:06 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : sooriya thaagam
பார்வை : 139

மேலே