அடைக்கலம்

சின்னஞ்சிறு குருவி ஒன்று
கூட்டிலிருந்து தவறி விழுந்தது
சிறு அலகும் எழில் சிறகும்
வெகுவாய் கவர
தூக்கி வந்தேன் ......
முப்பதுக்கு நாற்பது
வெறும் கூட்டை
இளஞ்சிறகுகளின் வண்ணம்
வானவில்லாக்கியது.....

எழுதியவர் : அருணா சுப்ரமணியன் (22-Apr-17, 7:41 pm)
Tanglish : adaikkalam
பார்வை : 90

மேலே