மௌனத்தின் மகளே
பேசமாட்டேன் என்ற பிடிவாதத்துடனும், கர்வதுடனும் அருகில் மௌனமாய் இருக்கிறாய் நீ.....
உன் கண்கள் இடைவிடாமல் பேசுவதையும்,
உன் மூச்சுக் காற்று என் காதில் கூறும் முந்நூறு கதைகளையும்
அசையாமல் ரசித்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறேன் நான்.....
மௌனத்தின் மகளே.....
காதலில் மௌனத்திருக்கு இடமில்லை என்பதை அறியாத பெண் நீயோ........
-பா.அழகுதுரை