உன்-மெய் காதல் அல்ல

நீலவிழிக்காரி ...
நெடும்கூந்தல்காரி ....
நிறத்தில் வெளுப்புக்காரி ...
நிஜத்தில் மினுக்குக்காரி ...
அசத்தும் வனப்புக்காரி ...
அரசி நினைப்புக்காரி - என
உன்-மெய் மீது
கவிபாடி
காதல் செய்யவந்தேன் நினைத்தாயோ ??? -
இது
உன்-மெய் காதல் அல்ல -
உண்மை காதலடி ...
உயிர்த்தேன் உனக்காக ...
உன் உறவில்
காதல் சொல்ல ..
உன் உயிரில்
பாதி அள்ள !!!