முள்ளுக் காட்டில் முளைத்த தாயே --- புதுக்கவிதை

முள்ளுக் காட்டில் முளைத்த தாயே !!! --- புதுக்கவிதை


முள்ளுக் காட்டில் முளைத்த தாயே !
உறங்கும் சிசுவின் உணர்வான
மூச்சினையே உறவாக நினைப்பவளே !
உயிராக்கித் தந்திடும் தெய்வமே !


கருவறையில் நான் உறங்க
கண்ணெனவே காத்தவளே !
அருமையான தாயவளே
அன்பிற்கோர் சான்றாவாள் !!


பெருமை பல பிறர் முன்னால்
பேசுகின்ற பெருமிதமே !
தருகின்ற உதிரத்தைத்
தந்திடுவாய் உணவாக பிள்ளைக்கே !


அன்னை உன்னை வணங்குவதில்
அகமும் முகமும் மலர்கின்றேன் .
என்னை ஈன்ற தாயன்றோ !
எதிலும் உனக்கு நிகருண்டோ !


அம்மா ' என்னும் சொல்லில்தான்
அகிலம் முழுதும் அடங்கிவிடும்
மகவாய் நானும் பிறப்பதற்கே
மகிமை பலவும் செய்தாயே .


உனக்காய்ச் சொல்லும் உன்னதங்கள்
உலகில் யார்க்கும் சொல்வதுண்டோ ?
கோவில் தெய்வம் நீயன்றோ ?
குடும்ப விளக்கும் நீயன்றோ ?
சாமி நூறு சாமி இருக்கிறது .
ஆனால் ....
தாயி இரண்டு தாயி இருக்கிறாளா !!!

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-May-17, 5:14 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 105

மேலே