பிறந்தநாள் வாழ்த்து

என்😘அன்புத்🤗 தோழியே...!😍

🤔

( ஆம்..!!🙌 அகம் அறிந்தும் முகம் அறியா நட்பு..!!! ☺)

இன்று.. (8/5/17)
கருவறையில் வாசம் செய்த நீங்கள்
பூமிப்பந்தில் நேசம் கொள்ள வந்த இனிய நாள் இது..!!

அன்று.. (8/3/17)
உங்கள் வீட்டில் வாசம் செய்த நீங்கள்..
அன்பின் உருவாய்
எங்கள் வீட்டில் நேசம் கொண்டு வந்ததில் உணர்ந்தோம் :


கண்ணனைக் காக்க வந்த கண்மணி நீ...!!! 
கடவுள் போல் வந்த கண்ணிமை நீ...!!! 
அன்பு காட்டும் அன்னை நீ...!!! 
புல்வெளியாக வந்த பசுமை நீ...!!! 
காற்றாய் வந்த சுவாசம் நீ...!!! 
மலரினில் எழும் வாசம் நீ...!!! 
நெஞ்சத்தில் நிறைந்த நிலவு நீ...!!! 
கல்வியாய் வந்த கலைமகள் நீ...!!! 
தித்திக்கும் திருமகள் நீ...!!! 
நிலவின் நேசமும் 
மலரின் வாசமும் 
கொண்டவள் நீ...!!! 
பால்வண்ண நிலவை 
பாற்கடலில் கரைத்து 
பெண் வடிவம் உரித்து 
பிறந்தவள் நீ...!!! 
துடித்துத் துவளும் இதயத்தை இதமாக்கும்
இனியவள் நீ...!!! 
(திரு)மணத்தால் (அனைவரின்) மனதையும் மகிழ்வித்த
மாமலர் நீ...!!! 

சுவாசிக்கும் மலருக்கு
நேசிக்கும் இதயத்தின்
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..!!🙏

பதியுடன் பயணிக்கும் முதல் பிறந்தநாள்..!!
இன்று போல் என்றும் உங்கள் வாழ்வில்🤗 வசந்(தி)தம் என்ற இமை
கண்(ண)ணோடு இணைந்திருக்க
வாழ்த்துக்கள்.☺

(வாழ்த்த வயதில்லை..🙏
வணங்குகிறேன்🙏)

- பகவதிலட்சுமி

எழுதியவர் : பகவதி லட்சுமி (17-May-17, 5:34 pm)
சேர்த்தது : பகவதி லட்சுமி
பார்வை : 2213

மேலே