சின்ன சின்ன ஆசை

சித்தம் மயக்கும் சித்திரமும் மயங்கி
நித்திரை தொலைத்தே நித்தம்
என்னோடு கதை கதைக்க ஓராசை..!

அசைந்தாடும் மாமரக்கிளையில்
அணிலோடு சேர்ந்தாடத்தான்
அடங்காத அற்ப ஆசையெனக்கு..!

சின்னஞ்சிறு செடியோடு
சிற்றெறும்பாய் சிலகாலம்
வண்ணமிகு சித்திரத்தில்
கட்டெறும்பாய் பலகாலம்
வாழ்ந்திடவும் சின்னவளுக்கு
ஓர் சிற்றாசை..!

வானவில்லை வாரியணைத்து
வண்ணக்குயிலாகி வட்டமிட்டு
வான் எல்லை காண
வஞ்சியெனக்கு கொள்ளை ஆசை..!

தன்னந்தனித்தீவில் தனிமையோடு தங்கி
வண்ணக்கடல் வர்ணித்தே
எண்ணக்கடல் நிரப்பத்தான்
எளியவளுக்கு ஓராசை..!

ஓர் மின்னல் எடுத்து கார்மேகம் உடைத்து
இடி இன்னல் தடுத்து பார் நனைக்கவும்
பாவையெனக்கு பலநாளாசை..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (27-May-17, 1:59 pm)
Tanglish : sinna sinna aasai
பார்வை : 292

மேலே