பொய் முகங்கள்
காலம் மாறினால் குணத்தை மாற்றுவான்
காலத்திற்கேற்ப தன் மனத்தை மாற்றுவான்
பொய்கள் பேசுவான் நீதியை அழிப்பான்
பொறாமை கொண்டு பொய்யாய் புன்னகைப்பான்
கூடவே இருந்து குழியை பறிப்பான்
கொடுப்பான் துன்பங்கள் அள்ளிக் கொடுப்பான்
பதவி ஆசைக்கு பன்முகம் கொள்வான்
பொய்யான முகத்துடன் உலகை அழிப்பான்
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்