எங்கிருந்து நான் வந்தேன்

தீபத்தின் ஒளியாய் தீப்பெட்டிக்கும், தீக்குச்சிக்கும் பிரசவித்த தீயைப் போலே எங்கிருந்து நான் வந்தேன்?
தாயின் வயிற்றில் உருவான பிண்டத்தில் எவ்வாறு அகப்பட்டேன்??.
விடை தேடி அலைகின்றேன் அறிவியலும் தரும் விளக்கத்திலே திருப்தி இல்லாமலே...

ஆன்மிகத்திலும் தேடிப்பார்த்தேன்...
பெருமை பாடி இருக்கிறார்களே தவிர தெளிவான விளக்கம் தரவில்லையே...

இறந்த பிறகு எங்கு செல்வேன்?..
எங்கு தங்குவேன்??...
கண்டு வந்து அனுபவமாய் எழுத ஆசை...
மரணம் ஒரு வழிப்பாதை என்றும்,
அதன் வழி சென்றார் திரும்பாரென்றும் பல அனுபவம் உணர்த்த மரணத்திடம் பேச்சுவார்த்தை நடத்திப்பார்க்கலாமா?
என்றே சிந்திக்கிறேன்,
தொடக்கமும், அந்தமும் அறிந்து, நல்லதொரு ஞானமாய் அகிலத்திற்கு உரைத்து,
அஞ்ஞானம் அகற்றி,
கொடிய செயல்களை இல்லாதொழித்த நன்மக்களென்ற சமுதாயத்தை அணையாத ஆதவனாய் உலகில் உருவாக்கி விட்டுச் செல்ல...

மரணத்தை நேசிக்கிறேன்..
மரணமும் வந்து அடிக்கடி கனவில் பேசி செல்கிறது...
எவ்வாறு சொல்வது அந்த உணர்வை?.

மரணத்துடனான பேச்சுவார்த்தை ஒருவேளை வெற்றியடைந்தால்,
வரலாற்றுப் புனிதர்களையெல்லாம் கண்டு உண்மை அறிந்து உங்களுடைய பூதக்கண்களுக்குக் காட்டுவேன் சாட்சிகளாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Jun-17, 8:49 pm)
பார்வை : 1641

மேலே