உன் விழி வந்து சேர்ந்து விட்டேன்
மணமாலையோடு வந்தேனடி!
உன் கண் இமையோடு சேர்ந்தேனடி!
உன் தமிழ் புலமை கண்டு வியந்தேனடி!
இமைவழி விழும் நீர் இனி தேவை இல்லை!
பிணமாலை விழும் வரை காத்திருக்க நீ தேவை இல்லை!
உயிர் உருகி நீ எழுதிய போது
உன் விழி வந்து சேர்ந்து விட்டேன்!
கண் சிமிட்ட மறந்தாலும்
உன்னை நினைக்க மறப்பேனோ?