உணவின் மகத்துவம்
நல்ல உணவு - சிதறி விழுந்தது சோற்றுப்பருக்கை
சொல்ல நினைத்தேன் - ""போகட்டும் போ""
மதிப்பிழந்த சோற்றுப்பருக்கையின் மகத்துவம்
மதியில் பட்டது - எறும்பு உணவுக்காக இழுத்தபோது.
மதிக்கும்போது மட்டுமே உணவின் மதிப்பு
பசிக்கும் போது மட்டுமே உணவின் மகத்துவம்.