இறைவனின் கை வண்ணம்

கடலில் எழும்பும் அலையின் ஓசைகள்
பாய்ந்திடும் செவிகளில் இனிமை கொடுக்கும்
உடலில் எழுபும் மனதின் ஆசைகள்
ஓய்ந்திடாது பெருகிட இனிமை கெடுக்கும்...


மணம் இழந்து மலராதப் பூக்கள்
இறைவன் பாதத்தில் என்றும் சேராது
குணம் இழந்து வளர்ந்த யாக்கை
இறந்தும் நரக வேதனை தீராது...


தென்றலில் அசையும் மரங்கள் புயலில்
நாணலாய் அசைந்திட முடியாது வீழ்கிறது
இன்பத்தில் நின்றாடும் உள்ளமோ?... வரும்
இன்னலில் நிற்க முயலாது சோர்கிறது...


மூங்கில் துளைசெலும் காற்றில் இன்னிசை
பிறந்து உலககின் உயிர்களை மயக்கும்
நீங்கும் நுரையீரல் காற்றில் இன்னுயிர்
துறந்து உலக வாழ்வை முடிக்கும்...


ஆண்டவன் படைப்பின் அவசியம் உணர்ந்தால்
தீண்டும் துன்பம் தூரமாய் விலகிடும்
வேண்டும் பொருளில் மனதை வைத்தால்
தூண்டில் மீனாய்த் துடிக்கும் வாழ்வே...

எழுதியவர் : வாழ்க்கை, இயற்கை (17-Jun-17, 11:14 am)
பார்வை : 184

மேலே