காதல் பிரசவம்

நான் கேட்டேன்...நீயும் தந்தாய்.....நான் கேட்டதோ காதல் என்ற வரத்தை...ஆனால் ... நீ தந்ததோ "வேண்டாம்" என்ற சாபத்தை....

சிசுவைக் கருவிலே சுமக்கும் ஒரு தாயைப் போல.....நீ வள்ளலென வாரி வழங்கிய வலிகளையும் ஏக்கங்களையும் என் நெஞ்சிலே சுமக்கிறேன்.....அத்தாய் படும் அதே வேதனையோடு.......

இன்றுவரை நான் குறைக்கவேயில்லை.......
கொஞ்சல்களையும் சரி.....
கெஞ்சல்களையும் சரி......
இனியும் குறைக்கப் போவதில்லை....

ஏன் அப்படி?...என்று வினா எழுப்பும் இவ்வுலகத்திற்கு.....

"அத்தாய் பட்ட அனைத்து வலிகளையும் சுகமாக மாற்றும் *குழந்தைப்பிறப்பு* என்னும் தருணத்தைப் போல...
என் நெஞ்சின் வலிகளையும் நீ போக்கிக் களிப்பைத்தரும்......
*காதல்பிறப்பு* என்னும் தருணத்தை நோக்கித் தவமிருக்கும் "........
என் இதயம் இயற்றிய இவ்வரிகள் "பதில்" கூறும்!!!!

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (18-Jun-17, 6:59 pm)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
Tanglish : kaadhal pirasavam
பார்வை : 146

மேலே