பெண்ணுக்கு ஆண்
பெண்ணுக்கு ஆண்
பெருந்துணைவனாய் இருந்தால்
அவர் இல்லறம் சிறந்தோங்கும்
பெண்ணுக்கு ஆண்
தந்தையானால் பாசவளையில்
குடும்பம் தழைத்தோங்கும்
பெண்ணுக்கு ஆண்
தமையனானால் அவள் பிறந்தவீடு
என்றும் சுகமாகும்
பெண்ணுக்கு ஆண்
நல்ல நண்பனானால்
சஞ்சீவி மலையை
சுமந்தாலும் நட்பு சலுப்பாகுமா?
பெண்ணுக்கு ஆண்
பேரளவில் நட்பென்றால்
நட்பினை ஆய்வு செய்து
கற்பினை காப்பாற்றும்
கண்ணகி குலமாமே,ஓங்கட்டும்
பெண்ணுக்கு ஆண்
தலைவனானால் அவள்
நல்ல வழிகாட்டியாய்
சமுதாயத்திற்கு ஒளியூட்டட்டும்
இப்படிப்பட்ட உறவு இல்லாதபோது
பெண்ணுக்கு ஆணோடு
உண்டான நட்பை
உலகம் தூற்றத்தான் செய்யும்