உண்மை மனிதர்கள்
உறவு என்று ஆனவுடன் அதில்
உயர்வு என்ன தாழ்வு என்ன?
உடன் இருக்க கனிவு காட்டி,
நட்போடு நகை கூட்டி,
நயம் தரும் நல்ல சில வார்த்தை,
உரைப்பது உயர்வாகும்.
பணமும்,பதவியும்,
பண்ணோடு சேர்ந்த இசையாக வேண்டும்.
பேச்சும், பழக்கமும்,
சுவை தரும் கனி போலாக வேண்டும்.
பண்பட்ட செயல் என்று பார்த்தவர் சொல்லுதல் வேண்டும்.
யாரும் ஏதுமறியா மனிதர்களல்ல,
வாழ்க்கை வசதிகள், வாழ்வின் ஆதாரமே,
வருவதும், போவதும் அவன் தந்த வரமே.
எதிர்பார்த்து இருப்போர் என்பது ஏளனம்,
இருப்பது போதும் என்று இருப்போரே ஏராளம்.
சொத்தும்,சுகமும் இருந்தாலே,
பந்தம் என்றால் ,
சொந்தம் என்பது எங்கே?
சுற்றம் என்பது என்ன?
சுகத்திலும், துக்கத்திலும்
உடன் வருதலே உன்னதமாகும்.