கிறுக்கி

"கிறுக்கி"

உன்..
தெத்துப்பல் அழகு
தெள்ளு தமிழ் அழகு
தினம் பார்க்கும் விழி அழகு
திகட்டாத சிரிப்பழகு
காலாடும் கொலுசழகு
காதோடு கம்மல் அழகு
கருமேகக் கூந்தல் அழகு
அதில் அணியும் ஒற்றைப் பூ அழகு
நெற்றியிடும் பொட்டழகு
முட்டக் கண் அழகு
திட்டும் உன் சினம் அழகு
பலித்தாலும் சொல்அழகு
நிறுத்தாத பேச்சழகு
எனை நிறுத்தச் சொல்லும் திமிர் அழகு
நீ பிறந்த மலை அழகு
அதில் ஆடும் மயில் அழகு
தரை குதிக்கும் அருவி அழகு
அது கலக்கும் நதி அழகு
நீ பார்க்கும் நதிநீர் அழகு
அது பார்க்கும் உன் முகமோ பேரழகு
உன் முகத்தில் பருகூட ஓரழகு
மாசில்லா உன் மனம் அழகு
உன்னால் என் தமிழ் அழகு..

#கரிசல்மகன்

எழுதியவர் : சிவக்குமார்-"கரிசல்மகன்" (5-Jul-17, 6:55 am)
Tanglish : kirukki
பார்வை : 229

மேலே