என் ஜீவன்

என் நிஜம் என்னும் உலகில் நிழலாய் தொடர்பவளே...
என் இரவில் கனவாய் நிறைந்து இருப்பவளே
நான் என்றும் உனக்கு தோல்வியை மட்டுமே பரிசளிக்கிறேன்.....
ஆனால் நீயோ அதை வரமாக நினைக்கிறாய்
உண்மையில் தோற்றது யாரடி...
உன் இடை என்னும் கொடியால் அழகாக என்னை கட்டுகிறாய்..
பரித்தவிக்ககும் என் மனதை
உன் பார்வையால் கொஞ்சுகிறாய்
என்னை கவிதை எழுத செய்தாய்
அதில் நீயே பிழை ஆனாய்....
மொழிகள் பல இருந்தும் உன் மௌனத்திக்கு விளக்கம் கேட்கிறாய்....
பல பேர் மத்தியில் நன்றாக நடிக்கிறாய்
தனியாக என்னிடம் மன்னிப்பு கேட்கிறாய்
உன் மனம் என்னும் கடலில் என் காதலுக்கான
பதில் எங்கேயடி....
என் உடல் மண்ணை சேருமுன் உன் மடி என்னும் தொட்டிலில் என்னை உறங்க செய்
அந்நொடி சாந்தி அடையும் என் ஜீவன்.......




எழுதியவர் : nithya (19-Jul-11, 9:09 pm)
சேர்த்தது : nithyanithu
Tanglish : en jeevan
பார்வை : 660

மேலே