என் காதல் பணியிடமிருந்து விடைபெறுகிறேன் இன்று - சகி
![](https://eluthu.com/images/loading.gif)
நான் நேசித்த எனதுப்பணியே
இன்றிலிருந்து உன்னிடம் விடைபெறுகிறேன் ......
இரண்டு வருடம்
உன்னை உண்மையாக
காதலித்து உன்னுடன்
பயணம் செய்தேன் .......
என் காதலனுடன்
திருமணத்தில் கைப்பிடிக்க
உன்னிடம் விடைபெறுகிறேன்....
நற்குணம் கொண்ட
என் முதலாளிகள் .....
ஆதரவாக கூடப்பணிப்புரியும் சக ஊழியர்கள் ......
பணிச்சுமை இருந்தாலும்
முகத்தில் புன்னகையுடன்
பணிப்புரியும் வேலையாட்கள் .....
மொழிப்புரியவில்லையென்றாலும் உண்மையாக பழகும்
வேறு மாநில உறவுகள் .....
பணியில் சில நேரங்களில்
வாக்குவாதங்களும் சண்டைகளும் சில மணிநேரங்களில் மறந்துவிடுவோம் ......
மதியவுணவு விதவிதமான
உணவுடனே பகிர்ந்துண்ணுவோம் .....
தவறுகளைச்சுட்டிக்காட்டி
மனம் வருந்தாமல்
அறிவுரை கூறும்
அன்பான முதலாளி.....
நன்மை இருக்குமிடத்தில்
தீமை இருக்கும்
நம் வாழ்வில் எல்லா தருணங்களிலும் .......
மிகவும் உன்னை
நேசித்து விட்டேன் -அதனால்தானோ உன்
பிரிவையெண்ணி இன்று இதயவலியுடன் அழுகிறேன் ......
அலுவலகமே உன்னை
முழுவதுமாய் சுற்றிப்பார்த்து
தொட்டுத்தழுவி கண்ணீர்விட்டு
விடைபெறுகிறேன் ......
மாலையில் நுழைவாயில்
தொடும் தருணம் என்
சகோதரனாக பழகியவன்
கையசைத்து வழியனுப்பினான் ......
வேறு தேசம்
வேறுமொழி
ஆனால் அவனின்
விழிகளில் வலிகள்
உணர்ந்தேன் (லக்ஷுமனன்)
என்னிதயத்தின் வலிகளுடன்
விடைபெற்றேன் .....
காலங்கள் மாறினாலும்
உன்நினைவுகள் என்னைவிட்டு
பிரியாது .......
எத்தனை வரிகள்
எழுதினாலும் தீராது
என்பணியே உன்மீது
நான் கொண்ட காதல் ....
மனமில்லமால் முடிக்கிறேன் .....
உனக்கான என் வலிகளை......
I லவ் my ஒர்க் ....
I மிஸ் My Relatives ......