பயமே நம்மை ஆட்டுவித்துத் தும்சிக்கும் பேய்

கீதை சொன்னது பயமே அதர்மமென்று...
பயங்கொண்டு இறைவனை வணங்குவதும் அநீதியே...

மனிதன் கொண்ட பயமே பெருங்கவலையாய் உருவெடுக்கிறது...
பயத்தையும் அதனால் ஈட்டிய கவலையையும் மறைக்க மனதில் கொபமென்ற உணர்வு கொதித்தெழுகிறது...

பயத்தால் கவலை...
கவலையால் கோபம்...
கோபத்திலிருந்து தன் மீது சம்சயம் தோன்றி அதிகரிக்க, மகிழ்ச்சியாய் வாழ்வோரைக் கண்டு பொறாமையும் நெஞ்சத்திலே குடிபுக,
பேராசையானது பிரசவிக்கிறது..

பிரசவித்த பேராசை கைகூடாவிடில் அதனால் வாழ்வில் வெறுப்பும், அதிருப்தியும் பற்றிக் கொள்கின்றன..

ஆக பயமே மனிதனைத் தும்சிக்கும் பேய்...
இருளில் செல்லும் மனிதனுக்குள் தோன்றும் பயமெப்படி கண்பதெல்லாம் பேயென்ற மாயத்தைத் தோற்றுவிக்கிறதோ, அதுபோல வாழ்விலே மனிதனைப் பிடித்த பேய் பயமே..

தனது பயத்தைப் போக்க இயலாத மனிதர்களே வெளித்துணை தேடுகிறார்கள்...
அத்துணை பணமென்ற காகிதமாகவோ, உயிர் குடிக்கும் ஆயுதமாகவோ,
பதவியென்னும் அதிகாரமாகவோ இருப்பதென்பது இவ்வுலகிலே நாம் அறிந்ததுவே...

இவ்வுண்மையறியாத நெஞ்சில் உண்மையான அன்பும், கருணையும் என்றும் குடியேறுவதில்லையே..
துன்பங்களைப் பிரசவிக்கும் இந்த பயமென்னும் பேயை அழிக்கவல்லது சர்வவல்லமை படைத்த அன்பே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (31-Jul-17, 7:26 pm)
பார்வை : 563

மேலே