நட்பு அலைபோல் என்றும் ஓய்வதில்லையே..

நிலவே..
நீ ஓர் நாள் வந்து
பல நாள் தேய்கிறாய்..
மலரே..
நீ ஓர் நாள் மலர்ந்து
மறுநாள் உதிர்கிறாய்..
மழையே..
நீ ஓர் நாள் பொழிந்து
மறுநாள் ஓய்கிறாய்..
உறவே..
நீ ஓர் நாள் வந்து
மறுநாள் மறைகிறாய்..
நண்பனே..
நீ ஓர் நாள் வந்தாலும்
நம் நட்பு அலைபோல்
என்றும் ஓய்வதில்லையே..