கூந்தல் தழுவ

மெல்ல எட்டி பார்க்கும்
தென்றலுக்கு வழி விட்டு
கதவைத் திறந்து
அந்த தென்றலை விட மென்மையாக
வழி மேல் விழி வைத்து
நாசி துளைக்கும் வாசனையோடு
முல்லை பூ கூந்தலை தழுவ

நான் வரும் நேரம் பார்த்து
நீ காத்திருக்க
உன் புடவை முந்தானை
என்னை தழுவ துடிக்க

சமையலறையில் நீ சேர்த்து வைத்த
உணவு சொத்துக்களும்
எனக்காக காத்திருக்க
உன் பூங்கரம் தொட
என் அலுவலக பணி முடித்து நான் ஓடி வர....

இப்படியெல்லாம் ஆசைப்பட
சொல்லிக்கொள்ள
மனம் துடிக்கத்தான் செய்கிறது.....

ஆனால் நமது மென்பொருள் நிறுவனம்
அதற்கெல்லாம் நமக்கு அனுமதி
தரவில்லையே கண்ணம்மா.....

உனக்கு பகல் நேர அலுவலக பணி
எனக்கு இரவு நேர அலுவலக பணி
விழிகளை கூட நோக்க
நேரமில்லாமல் கால ஓட்டத்தில்????

எழுதியவர் : சாந்திராஜி (2-Aug-17, 10:42 pm)
Tanglish : koonthal thazhuva
பார்வை : 127

மேலே