காதல் மங்கிய பொழுதினில்
அவள் காதலை மறுத்ததை குறித்து வருத்தமில்லை
ஆனால் காதலை மறக்க தொடுங்கும்
முதற்படி அவளை வெறுத்தாலும்
அவளை நினைவில் எண்ணாமல்
இருத்தலும்
என்பதே வருத்தமாய் இருக்கிறது
நாள் அவள் நினைவில் தான் விடிந்துகொண்டு இருந்தது
விழிகள் அவள் உருவம் காணும் நொடிக்காய் காத்து கொண்டுஇருந்தது
நாட்களின் திட்டமிடல் அவளை சார்ந்தே இருந்தது
செவிகள்
செவிகள் அவள் பேசும் ஒரு இரு வார்த்தைகளை வாங்கி கொள்ள
காத்து கொண்டு இருந்தது
நினைவுகள் அவளோடு வாழ போகும் நாளுக்காக ஏங்கி கொண்டுஇருந்தது
எல்லாவற்றையும் நொடியில் மாற்றுவது கடினமே!
விழியில் அவளை பார்க்காதே என்று சொல்கிறேன்
விழியை பிடிங்கி ஏறி என்கிறது மூளை!
அவள் பேச்சை கேட்காதே என்கிறது அறிவு
செவியை கிழித்து ஏறி என்கிறது இதயம்!
அவளை நினைக்காமல் இரு என்று சொல்லுகிறேன்
மூளையை கசக்கி ஏறிந்து விடு என்கிறது காதல்!
காதல் தோற்றுவிட்டது
அவள் என்னை விட்டு வெகுதொலைவு
போய்விட்டாள்
புள்ளியாய் மங்கி மறந்து விட்டாள்
இனி
எதுவும் மாறாது
அவளும் வரமாட்டாள்
அவள் எனக்கு தந்த அழகிய நாட்களும்
நினைவுகளும் மட்டுமே மிச்சம்
அதற்காக
அமிர்தத்திற்க்காக நன்றி
பெண்ணே!